Tuesday, March 16, 2010

பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவர் நடிகை ஹேமமாலினி

121 பேர் கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

13 துணைத் தலைவர்கள், 10 பொதுச்செயலர்கள், 15 செயலர்கள் மற்றும் ஒரு பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை பாஜக தலைவர் நிதின் கட்காரி நியமித்துள்ளார்.

இதில் பாலிவுட் நடிகை ஹேமமாலினி துணைத் தலைவராகவும், வருண்காந்தி எம்பி செயலராகவும் இடம்பெற்றுள்ளனர். ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே பொதுச்செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜக புதிய நிர்வாகக் குழு பட்டியலில் அந்தமான் முதல் ஜம்மு-காஷ்மீர் வரையிலும், குஜராத் முதல் அஸ்ஸாம் வரையிலும் அனைத்து தரப்பு பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளதாக பாஜக செய்தித்தொடர்பாளர் ரவிஷங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

12 பேர் கொண்ட பாஜக ஆட்சிமன்றக் குழுவையும் கட்காரி அமைத்துள்ளார். அக்குழுவுக்கு கட்காரி தலைமை வகிப்பார். அக்குழுவில் வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி மற்றும் பால் ஆப்தே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment